SWEETY GROUP

WELCOME TO SWEETYGROUP BLOGSPOT.COM

Saturday, May 12, 2012

சாவைக்கூட சந்தோசமாக ஏற்கும் தருணங்கள்





பதிவு எழுத வேண்டும் என்ற ஆசையை எனக்குள்ளும் விதைத்து விட்ட பதிவர்களிற்கான நன்றியுடன் எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்ற வினாக்களுடன் அலைந்ததற்கு ஓர் விடையாய் இதை பதிகிறேன்.


இதை சிலர் நாம் சீன் (seen) காட்டுவதாய் சீறலாம், Buildup காட்டுவதாய் பீத்தலாம்.

சிலர் வயித்தெரிச்சலால் தகிக்கலாம். சிலரிற்கு கடுப்பை கிளப்பலாம்.

உண்மையான நட்புடன் உல்லாசித்திருக்கும் நண்பர்களிற்கு தங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு பூபாள ராகமாய், தாங்கள் செய்த குறும்புகள் கும்மாளங்கள் நிறைந்த குறும்படமாய், இளமைக்கால இனிய நினைவுகளை புரட்டிப்  பார்க்கும் ஓர் தொகுப்பாய் அமைந்திருக்கும்




சாவைக்கூட சந்தோசமாக ஏற்க துணியும் அந்த பொழுதுகளை உணர வைத்தது இந்த திருகோணமலை பயணம்

Exams, Classes, Relations  என்ற பல தீய சக்திகளுடன் போராடி திட்டமிட்ட படி யாழ் பேரூந்து நிலையத்தில் தொடங்கியது இவ் இனிய தூறலின் முதல்துளி. இதில் இறைவன் கொடுத்த வரமாய் மஹாப்பொல மற்றம் Supermoon காட்சி




    எண்ணிலடங்கா சின்ன சின்ன ஆசைகளின் எண்ணிக்கையை குறைத்த இநத பயணத்தில் 'பளை' தாண்டியதும் அரைக்கும் ஆலைகளாகி விட்ட வாய்க்கு 'ஹொரவப்பொத்தான' தாண்டியே ஓய்வு கிடைத்தது. A.R.Rahman பாடல்களுடன் பயணித்ததில் Headsets கொழுவிய நாம் செவிடர்களானோம்.

பயணத்தின் கடைசி மணித்தியாலத்தில் எரிச்சலூடடிய 3 Idiots இன் கோபத்தை வழியில வெசாக் பண்டிகையில் இனிப்பு பரிமாறிய அப்பாவியிடம காட்டியது தப்பாகவே தோன்றி இன்னமும் உறுத்துகிறது. பஸ்ஸின் முன் நின்ற எருமை மாடுகளை திட்டும் சாக்கில் அந்த 3 Idiots ஐ  வாரியதில் ஒரு துள்ளல்

மாலை நேரம் என்றாலே கடற்கரையில் அராய்ச்சி வானமும் கடலும் முட்டிக்குமா? இல்லையா? முட்டினா கொம்பு முளைக்குமா ? இல்லையா?  ( விடை இன்னும் தெரியவில்லை)



பௌர்ணமி நிலவு, கடற்கரைமணல், நண்பிகள், மெல்லிய மழைத்தூறல், ஐஸ்கறீம் - இது போதும் எனக்கு !

இரவு உணவு தந்த சங்கி அக்கா வீட்டில் மூக்கு முட்ட நிரப்பிவிட்டு திக்குமுக்காடிய வேளை வருங்கால அவர் கணவர்க்காக கண்ணீர்த்துளிகளுடன் இட்டலி தட்டு, தோசைக்கல்லு என இரு கதாபாத்திரங்கள்

கோணேஸ்வரர் ஆலயத்தில் சில்லறை எண்ணுகையில் - நாம World பூரா famous என்பது தெரிந்தது (நாம் வெள்ளைத்துணி விரித்து இருந்தது அவர்களிற்கும் தெரிஞ்சிடுச்சோ..? ? ?..)

நடுக்கடலில் நின்றபடி வட்டமேசை மாநாடு- எந்த topic பத்தி பேசுவது என்ற தலைப்பில் அரங்கேறிய வேளை கரையில் செருப்பு தொப்பி, phones க்கு காவலாய் அனந்நசயனத்தில் என் அண்ணண் பிரணவன் phone துடைப்போன் ஆகியதில் சுள்ளானாகிவிட்டான் அந்த வெள்ளையன்




கதறி கூச்சலிட்டும், கெஞ்சி மன்றாடியும் கேட்காது ஓருவரை ஒருவர் கடலிற்குள் அமிழ்த்தி எடுத்த வேளை தான் ஈவு இரக்கமே எமக்கு இல்லை என்ற திடுக்கிடும் தகவலை அறிந்து கொண்டோம்.





நடுக்கடலில் நின்று சோடா குடித்து மாங்காய் சாப்பிட்டதை விட உப்பில்லா வடையை கடல் நீரில் தொட்டு சாப்பிட்டு demo காட்டிய நண்பியை தொடர்ந்து follow பண்ணிய மற்ற நண்பி தான் highlights


கடலினுள் கோபுரம் கட்டுவதாய் தோளில் ஏறி, இருந்த கொஞ்ச முடியையும் பிய்த்தெறிந்த கொடூரமும், கடற்பாம்பை கண்டதும் கொண்ட பயமும், படகின் வெளியே தொங்கிய கால்களுடன் உல்லாசமாய் சுற்றி வந்த கடற்பயணமும் என்றுமே இனித்திடும்.


அடிவயிறு கூசும் மலைப்பாதை பயணமும், இராட்டினமும், செருப்புகளை காவு கொண்ட கோணேசர் மலை இறக்கமும்,அலைகளுடன் போராடி வென்று மணலில் எழுதிய பெயர்களும் நம் நினைவை விட்டு என்றுமே அழியாது.


நள்ளிரவு 1 மணி 2 மணி வரை செல்லும் 'கக்கபெக்க' சிரிப்பொலியுடன் 'கஜ்ஜகஜ்ஜ' என்ற ஓயாத அலப்பறைகள் பாகம் 1 முதல் பாகம் 4 வரை வந்துவிட்டாலும் பாகம் 3 தான் அதிகாலை 3 மணிவரை நீடித்தது அதுவும் நண்பியின் நுளம்புக்கடி தொல்லை பாம்புக்கடியோ என்ற பயத்துடன் ஆயுள்வேத முறைப்படி சித்தாலேப கொண்டு தீர்த்துவிட்ட MBBS நாங்கள்


அமைதியின் உறைவிடமாய் அமைந்த கிருஸ்ணன் கோயிலும், ஊதி ஊதி குளிக்க தோன்றிய கண்ணியா நீருற்றும், காட்டுவழி பயணித்த காயத்ரி கோயிலும், தியானத்திற்கு Demo காட்டிய கோயில் மண்டபமும் இந்த தூறலின் சில தூவல்கள்


பொம்மைகளுடன் பொம்மையாய் தோன்றிய தருக்ஷியும், Management madam ஆக தோன்றிய சாந்தி அன்ரியும், பொல்லாத பெரியம்மாவாகிவிட்ட என் பெரியம்மாவும், நம் கஞ்சத்தனத்தில் சிக்கித் தவித்த திருகோணமலை கடைகாரர்களும் புதுமுக வீரர்களாய் எம்முடன்.



கோணேசர்மலையில் இருந்து கடலை பார்த்ததும், அயல் வீட்டு மாங்காய் பறிக்க வந்த நம் முன்னோர்களை  (கு.ரங்கன்) தரிசித்ததும் , மலை அடிவாரத்தில் இறங்கியதும், Gun boat ஐ கண்டதும் S ஆகியதும் நடுக்கடலில் Bottle passing  விளையாடியதும், பசுமை நினைவுகளாகவே.....


மஹாபாரத கர்ணண் முதல் OKOK பார்த்தா வரை சொல்லிச் சென்ற நட்பில் நாமும் கைகோர்த்து நட்புக்கான இவ் வலைப்பூவில் ஒரு பூ வரைந்த மகிழ்கியுடன்,  அடுத்த சில நிமிடங்களில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சுற்றித்திரிந்த இனிய நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்த பெருமையுடன் விடை கொடுப்போம்

நிறைவேறாத ஆசைகள் குறைந்து விட்ட வேளை...

இனிய நினைவுகள் பல நிரம்பி நிற்கும் வேளை...

வாழ்நாள் முழுவதற்மும் இந் நினைவுகளில் வாழ்ந்திருப்போம்.....



Nishali Ni

1 comment: