SWEETY GROUP 21 .02 .2008
நாம் நமக்கெனநாமம்சூட்டியநன்நாள்.2007 ஆம்ஆண்டின்காலாண்டு முடிவில்
மலர்ந்து,மணந்த நட்பூவிற்க்கு நல்லதொரு அடையாளமாய்,ஆரமாய் இந்த பெயர் வடிவில் இணை இல்லா நம் நட்பை நம் இதயங்களுக்குள் பொறித்த நாள்..
என் நினைவு பேரேட்டின் பக்கங்களை கொஞ்சம் முன்னால் தட்டி பார்க்கிறேன்.. அதில் கொடுக்கல் வாங்கல்களாய் நம் நட்பின் பரிமாற்றங்களும் பரிமாணங்களும்....
க.பொ.த உயர்தர பருவத்திலே வான் நிகர் வர்த்தகமே நம் அனைவரின் தெரிவாகியது நம் முதல் அதிர்ஷ்டம் .உயர்தர பரீட்சை நம் குறிக்கோளாக இருந்த காலம் ஆதலால்அறிவுப் பொருளாதாரத்தின் தேவைக்கிணங்கஅறிவு விருத்திக்காக DMI தனியார்கல்வி நிலையத்தைஅனைவருமே தெரிவு செய்தது இரண்டாவது அதிர்ஷ்டம்..
நம்மனங்களின்ஒருமித்த தன்மையின் காரணத்தால் உதிரிப்பூக்களாக இருந்தநாம்
நட்பு எனும் வாசம் வீசும் உதிராத மலர்செண்டானோம் ...
உயிர் மூச்சின் இறுதி நிமிடங்களிலும் இனிக்கும் தருணங்கள்...
- தவறாமல் காலையில் துயில் எழுப்பும் தவறிய அழைப்புக்கள் (MISSED CALLS)
- முன் வரிசை ,இரண்டம் வரிசை இருக்கைகள்..
- நாம் அறிமுகப்படுத்திய பத்திரிக்கை பழக்கம்..
- நண்பியின்அக்காவினுடைய திருமண வாரத்தில் ஒரு வாரம் திட்டமிட்டு (?) ,ஒழுங்கமைத்து (?) முதல் முறையாய் இணைந்து பயணித்த அச்சுவேலி பயணம் ..
- வீடு திரும்புகையில் பாதை தடை கடந்ததும் தடையிட முடியாமல் எழும்பிய சிரிப்பலை .
- நள்ளிரவு வானொலி ஒலிபரப்புக்களுடன் விடியல் தேடும் பூபாளமாய் விழித்திருந்த பொழுதுகள்...
- குறைவில்லா குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் ...
- நம் ஆதிக்கம் மட்டுமே நிறைந்த DMI கிணற்றடி
- அடித்து பிடித்து உண்ணும் ஆகாரங்கள் ...
- சந்நிதிகோவில்திருவிழாவில்இளம்சிவப்பு,பச்சைவண்ண கைத்தொலைபேசி வாங்கபோவதாய் கதை பேசிகேலி செய்த காலங்கள்...
- விடுமுறையில் சந்நிதியான் சந்நிதி தேடிஒன்றாய்பயணித்து , தொண்டமனாறு ஆழியிலும் நம்கால் தடம் பதித்த நினைவுகள்...
- பட்டங்களும், சங்கேத வார்த்தைகளும் சகஜமாகிப்போன நாட்கள் ..
- இணைந்த அழைப்புக்கள்(CONFERENCE CALL) மூலம்நட்புக்களின் பிறந்த நாளில் வாழ்த்துவதற்காய் நள்ளிரவு வரை தூக்கம் மறந்திருந்த இரவுகள்...
- இன்ப அதிர்ச்சி அளிப்பதே இலட்சியமாக கொண்ட தந்திரோபாய பிறந்தநாள் பரிசளிப்புக்கள்...
- கண்டோஸ் கலந்த கற்றல் மீட்டல்கள் (GROUP STUDY )
- அனைவரின் வீட்டிலும் அறுசுவை விருந்துகளும் அரட்டைகளும்
நீள்கின்ற நினைவுகள் அன்றும் தித்தித்தன,இன்றும் தித்திக்கின்றன..இனியும் தித்திக்கும் .......
Saru
sweet friends
ReplyDelete