SWEETY GROUP

WELCOME TO SWEETYGROUP BLOGSPOT.COM

Sunday, August 5, 2012

என் வாழ்கையில் நட்பு


ஏதோ ஓர் ஆர்வக்கோளாறிலும் நேரம் போவதற்காகவும் அலம்பல் ஒன்றை புலம்பியதை அடுத்து இன்னும் எழுதும் படி நண்பிகள் தூண்டியதன் பேரில் இன்னொரு முயற்ச்சி நண்பர்கள் தினமான இன்று இதைவிட வேறு எதை எழுதினாலும் சப்பையாக தான் இருக்கும் எனத்தோன்றியது.


காலம எழும்பினதில இருந்து SMS களும் Call களும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துக்களை அள்ளி வழங்கி சென்றது. Radio விலும் FB , Twitter லயும் Friendship day special  தான்.
ஏதோ எழுதுவதை விட என் வாழ்கையில் முக்கியமான இடம் பிடித்த நட்பை பற்றி எழுதுவது என தீர்மானித்து விட்டேன்.


இதுநாள் வரையில் நட்பிற்கான அர்த்தங்களை அந்தந்த வயதிற்கு ஏற்றபடி 3 விதமாக அறிந்துள்ளேன்.முதலில் பெற்றோருடன் ஊரிலிருந்த அம்மம்மா தாத்தாவை பார்க்க சென்ற போது அறிமுகமான நண்பியிலிருந்து பள்ளியில் சேர்ந்த போது பக்கத்து கதிரைகளில் இருப்பவர்கள், அயல் வீடுகளில் என் வயதை ஒத்த குட்டி குட்டி நண்பர்கள் வரையிலும் எனக்கான நட்பு வட்டத்தை அமைத்து கொண்டேன்.

அக்காலத்தில் நேரம் போவதை மறந்து விளையாடுவது, பேனா பென்சில்களை பரிமாறுவது, முக்கியமாக சாப்பாடுகளை மாற்றி உண்பது, பாடசாலை வீடடுவேலைகளை (Homework) செய்து கொடுப்பது, பிறந்த நாளிற்கு Toffee, Chocolates  கொடுப்பது, புதுச்சட்டை போட்டால் அதை அளவில்லா ஆனந்தத்துடன் கொண்டு போய் காட்டுவது, அம்மா அப்பாவை நச்சரித்து தீபாவளிcard வாங்கி அதில் ஏதோ எல்லாம் எழுதி நண்பிக்கு தெரியாமல் அவளின் கொப்பியில் ஒளித்து வைப்பதில் ஓர் பரம திருப்தி.

இதில் பள்ளிக்கூட காலத்தில் எனது நண்பியும் நானும் சேர்ந்து செய்த அடடூழியங்கள் பல, அவற்றில் தரம் 5 ற்கு அனுமதி மறுக்கப்பட்ட பாடசாலை சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து 'ஆனால் அது நிஜம்' (அந்த கால TV தொடர்) என நடத்திய நாடகம், பாடசாலை தோட்டத்தில் பயிற்றங்காய் புடுங்கி அதிபரிடம் வாங்கிய பேச்சுகள் இரண்டும் சுவாரஸ்யம்.

அடுத்து தரம் 6 ல் அடுத்து வேறு பள்ளிக்கூடம் சேர்ந்தால் எனக்கான நட்புவட்டம் இன்னும் கொஞ்சம் விரிந்தது. அப்போது பக்கத்து கதிரைகளில் இருப்பவர்களுடனும் எனக்கு பிடித்த சிலரிடமும் பழகி நட்பு எனும் உறவை வளர்த்துக்கொண்டேன்.


ஒப்படை எழுதிகொடுப்பது, homework செய்து கொடுப்பது, தனியார் வகுப்புகளிற்கு சேர்ந்து செல்வது, என தொடர்ந்து O/L காலங்களில் சேர்ந்து படிப்பது வரை தான் நட்பு என நினைத்ததுண்டு. இந்தக்காலத்தில் சேர்ந்து படித்த நண்பிகளை அடுத்த ஆண்டு வேறு வகுப்பிற்கு மாற்றி விட்டால் இருந்து கண்ணீர் வடிப்பது, பிறகு மனதை தேற்றி intervel ல் மட்டும் ஓரே இடத்தில் சேர்ந்து சாப்பிடுவதும் தனி இன்பம்.


பாடசாலை காலத்திலேயே A/L என்பதே Highlight  என்றெ கூற வேண்டும். எங்கெங்கோ இருந்து பலர் வந்தாலும் அதில் எப்படியோ முதலில் சிரிப்புக்களை மட்டுமே பரிமாறி பின் கூட்டமாய் இருந்து (தனியார் வகுப்பிலும், பாடசாலையிலும்) பலபல விடயங்களைப்பேசினோம்.


உணர்வுகள் நடத்தைகள் பலவும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்துவிட்டகாரணத்தால் பின்னர் அது மேலும் வலிமையடைந்து sweety Group  என பெயர் வைத்து, அதன்பெயரில் நாம் செய்த, செய்கின்ற அட்டகாசங்கள் அளப்பறைகள் பல.அவற்றை எனது நண்பி ஏற்கனவே ஒருPost ல் எழுதியபடியால் அதை தவிர்த்து விடுகிறேன்.

அதற்கான இணைப்பு http://sweetsweetygroup.blogspot.com/2012/02/sweety-21.html

இதனால் எங்கள் மேல் கடுப்பான பல மாணவர்கள், ஆசிரியர்கள் ஏன் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தவரும் உண்டு.ஆனாலும் ஒருவாறு அனைவரும் A/L  பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று அனைவரின் வாயையும் மூடிவிட்டோம்.

சந்தேகத்திற்கு இடமில்லாத நட்புகள் சந்தோசம் மட்டுமே நிறைந்த பள்ளிபருவத்தை கடந்த பின் தான் அதுவே என் உலகம் என்ற உணர்விலிருந்து வெளிவந்தேன். ஏகப்பட்ட சவால்களை சந்தர்ப்பங்களைத் தாங்கி புன்னகையுடன் வரவேற்றது வேறு ஓர் உலகம்.
நல்லா வந்து மாட்டிக்கிட்டியா ??? என்று சிரித்ததோ
எதிர்கால வெற்றிகளை எண்ணி சிரித்ததோ தெரியவில்லை.(இதற்கான விடையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.) இதன்போது என்பலமாக Sweety Group  உடன் வந்துகொண்டிருக்கிறது.

Local, National, International என sweety Group ன் location மாறிவிட்டாலும் வருடத்தில் ஒரு முறையாவது சேர்ந்து எமது அளப்பறைகள் தொடராமலில்லை


அதில் அண்மையில் நடந்த நண்பியின் அக்காவின் திருமணம் அனைவரின் நினைவுகளிலும் ஓர் இனிய தடத்தை பதித்துள்ளது.

பரீட்சை காலங்களில் சேர்ந்து புத்தகம் கொப்பிகளை வைத்து கும்மியடிப்பதும் Serious ஆன பல பிரச்சினைகளை comedy யாகவும் மொக்கையான சில விசயங்களை Serious ஆகவும் அலசி ஆராயவும் நம்மால் மட்டுமே முடியும்.

பல பிரச்சினைகளின் போது நண்பர்களிடம் கூறி தீர்வு காண்பதும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் வீடுகளில் தங்குவதும், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை நண்பிகளுடன் சோந்து கதைக்கும் போது மறந்து விடுவதும் இப்படியான சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் பல பிரார்த்தனைகளுடன் அனுமதி கேட்டு சென்ற Trinco Tour  ஐ வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது

இப்படி நட்புகளிற்கு ஓர் முக்கியமான இடம் எனது வாழ்க்கையில் எப்பவுமே உண்டு.
இதில் எனது முதல் நண்பியும், பள்ளியின் ஆரம்ப நாட்களில் கிடைத்த ஓர் நண்பியும் இப்பொழுதும் எம் sweety Group ல் இருப்பதற்கு கடவுளிற்கு நன்றி சொல்வதை தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு.


அதை தவிர மற்றைய நட்புகள் எல்லாம் முகவரிகள் தொலைத்து, தொடர்புகள் விட்டுப் போய் விட்டாலும் தற்போது Facebook  மூலம் சிலரின் தொடாபு கிடைத்தது மகிழ்ச்சியே...

இத்தனை நாளும் வாழ்வின் முக்கியமான பல கட்டங்களில் Sweety Group எனது நம்பிக்கையாக என்னுடனேயே இருந்துள்ளது, இனியும் இருக்கும் என்பது உறுதி.

இதை வாசித்து விட்டு ஏன்டா இவள எழுதச் சொன்னோம் என்று அவர்கள் தலையில் அடிப்பதை தவிர வேறு வழியில்லை.
இனி எழுத சொல்லமாட்டார்கள்

ஆனாலும் தலைப்பை பார்பவாகள் அனைவருக்குமே நண்பர்கள் தினமான இன்று அவர்களின் நட்பு பக்கங்களை ஒரு முறையேனும் புரட்டி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.........

Harini

Saturday, July 28, 2012

ஐயோ தாங்க முடியல......


இத வாசிச்சு போட்டு உங்கட வாயில இருந்தும் இந்த வாக்கியங்கள் தான் வரும் என்டு எனக்கு நல்லா தெரியும்.
ஆனா அதுவேற, இதுவேற.இது என்னோட சொந்தகதை சோககதை (ஓடிடுங்க, ஓடிடுங்க, நிக்காம ஓடிடுங்க)


சிலவற்றை செய்துவிட்டு ஏன்தான் செய்தோமோ என்று வருத்தப்படும் பல விடயங்கள் இருக்கு. அதில ஒன்டு தான் நான் கம்பஸ்க்கு போன கதையும்.
பெரிய கஸ்டப்பட்டு ஒரு மாதிரி ஒரு வருசத்தை ஓட்டியாச்சு.  எப்ப  2nd  Year தொடங்கிச்சோ அப்பவே சனியும் பிடிச்சிற்று. Study leave என்டு ஒரு மாசம் Vacation  என்டு ஒரு மாசம் கொஞ்சம்  கல்லு ரோட்டில வண்டி ஓடுற மாதிரி சந்தோசமாகவும் bore ராகவும் போச்சுது. அப்புறமா ஆரம்பிச்சுது பாருங்க Strike என்ற பெயரில ஒரு வில்லங்கம். இன்றும் அதுக்கு ஒரு முடிவே இல்ல. ரொம்ப நேரம் TV பாக்கிறது, வானொலி கேக்கிறது இது இரண்டையுமே வெறுக்கப் பண்ணின பெருமை strike யே சேரும். ஓவ்வொரு நாளும் விடியுது, இருளுது அதே போல தான் வாழ்க்கையும் ஒரே மாதிரி போகுது.


காலம எழும்பி போனோட சொந்தம் கொண்டாடி, அப்புறம் வீட்ல இருக்கிற ஒவ்வொரு கதிரேலயும் மாறி,மாறி இருந்து கனாக்கண்டு போட்டு ( Campusலயும் செய்யிறது இதத்தான்), சமைச்சு தாறத சாப்பிடுறதும் செய்ய ஒண்டுமேயில்ல என்று பின்னேரம் முழுக்க நித்திரை கொண்டு போட்டு இரவில நித்திர வராம அவஸ்தை படுறதுமே பொழைப்பா போச்சுது. அப்புறம்அடுத்த நாளும் ஒரே மாதிரியே விடியுது.


இதுக்கு நடுவில வெட்டியாதானே இருக்கிறாய் சப்பாத்து கழுவு, iron பண்ணு, அத செய் இத செய் என்று வீட்டுல இருக்கிறவங்க தொல்லையோ தாங்க முடில. வீட்ல நமக்கிருந்த கொஞ்ச மரியாதையும் இப்ப இல்லாம போச்சுது
கம்பஸ்ஸ விட்டுட்டு வேலைக்கு போகலாமெண்டா அதுவும் முடியல. உறவுகளின்ர கனக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். இதால என்னத்தையோ சாப்பிட்டு துப்பவும் முடியாம விழுங்கவும் முடியாம தவியா தவிக்க வேண்டியா நிலமயா போச்சுது.

யாரை கண்டாலும் எப்ப தொடங்குதாம் என்ற கேள்வியிலிருந்து (ஒரு சிலர் விதி விலக்காய் இருக்கலாம்)
என்னைப் போலவே மற்ற கம்பஸ் நண்பர்களும் புலம்பி கொண்டு தான் இருக்கினம் என்டு தெரியுது


இப்ப கூட பாருங்க வேலை வெட்டி இல்லாம கொஞ்ச நேரம் போகுறதுக்காக தான் இத கிறுக்க வேண்டி இருக்கு
....................................
                         ..............................................................................................
.......................................................................................................................
                            ...............................................................................................
 இல்லாட்டி நானாவது இப்பிடி ஏதாவது எழுதுறதாவது. இதுக்கும் எனக்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே !!!
இப்பிடி (அ) புலம்ப வைச்ச பெருமை கூட பல்கலைக்கழக பகிஸ்கரிப்புக்கு தான் சாரும்




நண்பர்களின் புலம்பல்கள் சில
அப்பப்போ யாராவது ஞாபகபடுத்துங்கப ்பா இல்லைன்னா மறந்தே போய்டும் போல இருக்கு நாம யுனிவர்சிட்டி ஸ்டூடண்ஸ் ன்னு
கண்ணை திறந்து கொண்டு கிணத்துக்க விழுந்த மாதிரி ஆயிடுச்சே நம்ம கதை#Always_வெட்டி
Strike க்ற்கும் degree க்ற்கும் இடைல சிக்கி என் படிப்பு புஸ்ஸூவானமாயிடுச்சு# (B)பாட் Minus staff and the Lecturers போத் பிளாய்ட் பாஸ்கட் இன் தி மை லைப்#லொச்சக். மொச்சக்.பச்சக்
என்ன பண்றன்னு கேட்டா, சும்மா இருக்கேன்னு பொய் சொன்னா கண்டுக்கமாட்டாங்க. But
உண்மைய சொன்னா "சீ தூ" ங்கிறாங்க
 செத்துட்டு நரகத்துக்கு போனாலும் சந்தோசம். . வீட்ட இருக்கவும் முடீல..
கொலைக்களம் போகவும் முடியல..
என்ன கொடும சரவணா.,.?
5 ம் ஆண்டு பெயில்னா கோடீஸ்வரன்
O/L பெயில்னா லச்சாதிபதி.
A/L பெயில்னா பணக்காரன்
U.Sity போனேன்னு வையேன் நீ cnfirm aa பிச்சைகாரன் தான்
எந்த MBBS, Excutive ஏன் farmers, cleaners கூட நம்மள மாதிரி hard work பண்னல#வெட்டியா இருக்கம்
24 ஹவர்ஸா வெட்டியா இருக்கிற அன்ரீஸ் கூட நமக்கு வேல சொல்றாங்க...
எப்பதாண்ட முடிப்பீங்க இந்த strike ஐ!

 நல்லா பாருங்க  நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்



Harini

Friday, July 13, 2012

Face book இல்லையென்றால்

Face book இல்லையென்றால்
ஸ்கொலர்சிப் Exam  க்கு 10 மார்க்ஸ் கேள்விக்கான தலைப்பு போல ஓர் தலைப்பு

சத்தியமா இது ஒரு மொக்க Post. Typing ல் ஒரு மணி நேரத்தை வீணடிக்கவும், இவ்வளவு மொக்கயாக post எழுத முடியும் என்பதை நிரூபிக்கவும், இது எழுதப்படுவதால்; சீரியஸாக status update செய்வோருக்கும், (chat) சட்டியில் சண்டை பிடிப்போருக்கும், கொமண்டில் கொழுவி இழுப்போருக்கும் ஒர் அட்வைஸ் "you continue, you continue"
நிமிசத்திற்கொருமுறை  refresh கொடுத்து, refresh கொடுத்து updates பெறும் வெட்டியாளர்கள் மட்டும் விரும்பினால் தொடரலாம்




 Face book இல்லையென்றால்
நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாகவே இருக்கிறது – என்னென்ன கொடுமை நடந்திருக்கும்.
சமூக சீர்கேடு, கலாசார சீரழிவு நடந்திருக்காது, இளைய சமுதாயம் சீர் கேடாது அப்பிடி இப்பிடின்னு கட்டுரை ஆத்த வரல.FB  இல்லாட்டி மடடும் ஏதோ எல்லாம் நல்லாவே இருந்திருக்குமாக்கும்.

என்னைய போல ஆல்வேய்ஸ் வெட்டீஸ் க்கு என்ன ஆயிருக்கும்
ஏகப்பட்ட கலைக்சொற்கள் தெரிய வந்திருக்காது
status என்டா நம்மட range
notes என்டா short-notes 
Profile என்டா Company profile

அப்பிடிதான் தெரிஞ்சிருந்தம்

அத விடுங்க
இங்க 1008 சங்கம் அமைக்கிறாங்களே.
முன்னாடில்லாம் நமக்கு கிராம அபிவிருத்திச் சங்கமும், விவசாய சம்மேளனமும் தான் தெரியும்.
இப்ப எத்தின சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடக்கம் Stone bench ல் சொறி தேய்ப்போர் சங்கம் வரை எண்ணற்றவை..


கொலை கொள்ளை கற்பழிப்பு என பேப்பர்ல வந்தா பாக்கிறமோ இல்லையோ, link share பண்ணி blog post ஆ வந்தா வாசிப்பம் ஏன்னா comment என்ட பேர்ல நாமளும் கிழி கிழிய்னு கீய்க்கலாம்.

பேர் ஊர் தெரியாதவன் கூடrequest  போடுவானாம்,accept பண்ணா chat  ல Hai அப்பிடியே Hw r u இதுதானே எல்லா சட்டிக்கும் சற்றுக்கும் பிள்ளையார் சுழி. இது இப்பிடியே தொடர்ந்து v r friends  என்டு வந்திருவாங்களாம். அப்புறம் v r lovers எம்பாங்க. இதெல்லாம் எம்புட்டு நல்ல விசயம் பாருங்க.
Parents க்கு புரோக்கர் பீஸ், அய்யர்ட்ட சாதகம் பாக்ற பீஸ் ல இருந்துWedding invitation  வரை அம்புட்டும் மிச்சம்.


1500 – 2000  Friends ஐ வெச்சுக் கொண்டு photo வ upload பண்ணி ஊரெல்லாம் உலவ விட்டுட்டு போட்டோல கோல்மால் நடக்குதாம் என்டதும் கேக்கிற லப்டப் sound க்கு இணையா இளையராஜாவே வர முடியாது. அவ்வள்ளவு கிக்கா இருக்கும்.

பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில மட்டும் member ஆ இருந்த பல உள்ளங்கள் இப்ப எத்தின சங்கத்தில உறுப்பினர்  என்டது like list பாத்து தான் அறியோனும்.

நாங்களும் போராளிகள் தான்
2009 may நடந்த உக்கிரமான போரை விட இன்னும் சண்டையிடுவோம், இந்த facebook ல் 'தலக்கும் தளபதிக்குமாய்''

7 – 10 என்ற (chatting) சட்டி கழுவும் நேரம் 9 - 12 என்றானதும்,
10 – 6 என்ற அனந்தசயன நேரம் 1-7 ஆனதும்,
ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்க செய்யும் இந்த FB யின் மகிமையே மகிமை!!!


FB ஓர் அறிவு பெட்டகம்
ஆன்மீகமா  நித்தியானந்தா முதல் துகள் வரை
அரசியலா   ஆங்சாங்சூகி முதல் கருணாநிதி வரை
சினிமாவா   Superstar முதல் Power star வரை
அத்தனையும் அடங்கிய அறிவுச்சுரபி.
அள்ள அள்ள குறையாமல் இல்லாததையும் சொல்லும்.

லோசன் அண்ணாவின் ஹர்சு முதல்
கார்க்கி சாரின் ஹைக்கூ வரை பாசப்பிணைப்பையும் சொல்லாமல் இல்லை.
கோபிநாத்தின் கோர்ட்டிலிருந்து டோணியின் ரி சேர்ட் வரை அலசாமலும் இல்லை.

கடந்து வந்த இந்த வெட்டி நாட்களில் இந்த face book மட்டும் இல்லையென்றால் தெல்லிப்பளை, அங்கோட மட்டுமல்ல கீழ்பாக்கம் specialist doctors   கூட என்னிடம் appointment வாங்கியிருப்பார் treatment எடுக்க என்பது மட்டம் நிச்சயமான உண்மை.


மொத்ததுல நான் ஆரம்ப ஸ்டேஜ்ல இருக்கிற லூசு என்றத சொல்லாம சொல்லிட்டன் பாருங்க


இப்பிடி பிணாத்துறதுக்கு கூட FB தேவைப்படுது பாருங்க

ஸ்டாப் வந்திடுச்சு எல்லாரும் இறங்குங்க




Nishali Ni


Sunday, June 24, 2012

நானும் ஏழரைச்சனியும்



O/L முடிஞ்சு A/L தொடங்கிச்சே அப்ப ஆரம்பிச்சது இந்த ஏழரை சனியன்.
A/L காலத்த சனியன் புடிச்ச காலமெண்டா எல்லாரும் என்னிய லூசும்பாங்க. ஏன்னா A/L  என்றவுடன் அனைவருக்கும் தோன்றுவது பள்ளியின் கடைசி நாட்கள், தனியார் வகுப்பின் அட்டகாசங்கள், நண்பர்களாய் சேர்ந்து செய்த விழாக்கள் இன்னும் பல.......

ஆகஸ்ட்ல நடக்கிற இறுதிக்கட்ட போர்ல (பரீட்சைல) ஜெயித்து விட்டா போதும் உனக்கு விடுதலை ன்னு ஊரே சேர்ந்து உசுப்பேத்தும் பாருங்க அங்க ஆரம்பிச்சது இந்த 7 ½. அப்பவே அளவோட படிச்சிருந்தா நாம இப்புடி அழிஞ்சி போயிருப்பமா???
அளவோட  படிச்சவனெல்லாம் இப்ப Bank லயும் Company லயும் வேலை செய்ய AK (ஆர்வக் கோளாறு) யான நாம இப்புடி மாஹாப்பொலவை நம்பி வாழ்றம்

இந்த Chance யாருக்கு கிடைக்கும் !
ஒருக்கா போய்தான் பார்பமே !
இப்ப வேலைக்கு என்ன அவசரம் ?
உனக்கு மேல படிக்கிறதுக்கு என்ன ?
நல்ல Chance, miss பண்ணாத!

உப்பிடி சொந்தங்கள், பந்தங்கள், சீனியர்ஸ், வெளிநாட்டுக்காரர் எல்லாம் சேர்த்து சின்னவயசு இலட்சியத்தை சின்னாபின்னமாக்கிட்டுதுகள்

இந்த ஏழரை சனியனும் இப்பிடித்தான். அத 3 part ஆ பிரிக்கலாமாம். Part 1 தான் இந்த A/L  காலம். சிறு கவலைகளுடன் அதிக சந்தோசங்களுடன் நல்லாவே போச்சு

Part  2 இருக்கே என்னால தாங்க முடீல.

ராக்கிங் இல்லையெண்டாங்கள்  Mix in up என்டு கழுத்தறுத்தாங்கள்.
English Medium ன்னாங்க, இங்கிலிஸ்காரன் மட்டும் கேட்டான் டம்ளர் தண்ணீரில மூழ்கி சாக துடிப்பான்.
Lectures  என்ட பெயரில நடக்கிற கூத்து இருக்கே?
சத்தியமா நான் அவயள்ள பிழை சொல்லல, ஆனா தூக்கம் தூக்கமா வரும் அப்பிடியே காதுல பஞ்சு வைக்க தோணும்.

சப்பிறதுக்கு Handouts
துப்பிறதுக்கு Exam papers
கத்துறதுக்கு Colours night
மொத்துறதுக்கு Batch boys  இப்பிடியே போச்சு


இவ்வளவு கொடுமையும் பொறுமையா தாங்கிட்டு வந்தா இப்ப மறுபடியும் Strike ன்னு வச்சு கொலையா கொல்றாங்கய்யா....
 March 16 ல இருந்து இன்ட வரை வெறும் 11 நாள் தான் Lectures  . இந்த university எப்புடி இருக்கும் என்டதே மறந்திடுச்சே. போற போக்கில 4 years முடிக்க 5,6 வருசம் ஆகிடும்.


இப்ப நம்ம பொழப்பிருக்கே 12,1 மணிவரை Fb, Twitter  ன்னு சுத்திட்டு படுத்தா காலைல  8.30 க்கு alarm வைச்சு எழும்பி ஒரு கோப்பி, சாப்பாடு, lunch பிறகு 4 க்கு tea  அப்பாலிக்கா 7 க்கு ஒரு கோப்பி dinner.  மிச்ச நேரம் எல்லாம் Fb, Twitter ல சுத்துறதும், திருட்டுVCD  ரிலீஸ் பண்றதும்  தூங்கிறதும் தாங்க


இதெல்லாம் ஒரு பொழப்பா ன்னு நீங்களும் திட்றீங்க பாருங்க :(


இதையெல்லாம் தாண்டி இப்பயும் வேலைக்கு போகலாமெண்டா
இன்னும் 2 ½ வருசம் தானே ஓரேடியா முடிச்சிட்டு போ!
மினக்கெட்ட ரெண்டு வருசம்  waste ஆகிடுமே?
இதுக்கு நீ அப்பவே போயிருக்கலாமே?
atleast General Degree யோட போறது!
இப்ப படிக்காம எப்ப படிக்க போற ?

இப்புடி ஏகப்பட்ட பல்குழல் தாக்குதல்

7 ½ சனி முடிய இன்னும் 4 வருசம் இருக்கு, அதுக்குள்ள நாம முடிச்சிடுவம்ய்யா நம்ம டிக்கிறிய

ஆனா ஒன்னு இனிமே எவனாச்சும்
இளமைக்காலம் இன்பம்
University life best
அப்பிடி இப்பிடி எவனாச்சும் வசனம் பேசுறத கேட்டன் 'செத்தான்டா சேகரு'




 Nishali Ni


Wednesday, May 30, 2012

இன்றைய நாள் பொழுதில் 30.05.2012

ஏன்?, எதற்கு? என்ற கேள்விகளிற்கு விடையில்லாத போதும் இப் பதிவை எழுத வேண்டும் என்று சிலமணி நேரமாக என் மன உறுத்தலால் பதிகிறேன்.

ஆண்டுகள் பல கடந்து ஓர் ஆவண பதிவாய்,
அராஜகம், ஆவேசம், ஆற்றாமை என்பதின் அனுபவ பாடமாய்
பல்கலை வாழ்வின் ஓர் அங்கமாய் இருக்கட்டும் என தொடர்கிறேன்.


சைக்கிள் பார்க்கிலிருந்து OCB வரை சாதாரணமாக விடிந்த போதும் அடுத்த கணம் நம் சக மாணவர்கள் நின்ற விதமே ஓரு (Seen) சீனுக்கான Intro வாக இருந்தது

இன்றைய நாள் பலருக்கு வலிகளும் வேதனைகளும் நிறைந்த நாள்,
பயங்களும், பயங்கரங்களும் பற்றிக்கொண்ட நாள்,
அவமானமும் ஆக்ரோசமும் ஆர்பரித்த நாள்,

ஆனால் எனக்கு

நாம், நமக்கு, எங்கட பட்ச் (Batch) என்ற
அனைவருக்கும் வரவேண்டிய ஆணவம் வந்த நாள்


Offer அ(டி)ளிப்பு தந்த போதும், அசையாது நின்ற மாணவர்களும்
கண்டவுடன் கண்கலங்கி நின்ற மாணவிகளும்
தீவிரவாதிகளும், தீர்ப்பு தந்தோரும்
கண்முன்னே நின்றாலும் கடைசி நேர OB யில்
கண்திறந்து கண்ணுறங்கிய நாம் தான் கில்லாடிகள்

நமக்கள் எத்தனையோ குழுக்கள், முறால்கள், கஜால்கள்
வந்த போதும்,
இனியும் முற்றுப்பெறாது தொடரும் என்ற போதும்,
இன்றைய நாள் பொழுதில்.

சிவகாசி சோலையம்மாக்களும், ஏகப்பட்ட சொர்ணாக்காகளும் சேர்ந்து நின்ற வேளையும்,
KIK இல்லாத மகஜர் அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்த போதும்,
Mixing இல்லாத Soda என்று சீறிப் பாய்ந்த போதும்,
கெத்தாக சொல்லலாம் நாம் "நண்பேன்டா" என்று.


பின்விளைவுகள் பல வால் பிடித்து வரலாம்
முன்கோபங்களால் சில முரண்பாடுகள் வரலாம்
என்னுடைய மனதளவில்
இன்றைய இந்நாள் பொழுதை
ஓற்றுமைக்கான உதாரணமாய்
ஐயமின்றி சொல்வேன்

Nishali Ni

Saturday, May 12, 2012

சாவைக்கூட சந்தோசமாக ஏற்கும் தருணங்கள்





பதிவு எழுத வேண்டும் என்ற ஆசையை எனக்குள்ளும் விதைத்து விட்ட பதிவர்களிற்கான நன்றியுடன் எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்ற வினாக்களுடன் அலைந்ததற்கு ஓர் விடையாய் இதை பதிகிறேன்.


இதை சிலர் நாம் சீன் (seen) காட்டுவதாய் சீறலாம், Buildup காட்டுவதாய் பீத்தலாம்.

சிலர் வயித்தெரிச்சலால் தகிக்கலாம். சிலரிற்கு கடுப்பை கிளப்பலாம்.

உண்மையான நட்புடன் உல்லாசித்திருக்கும் நண்பர்களிற்கு தங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு பூபாள ராகமாய், தாங்கள் செய்த குறும்புகள் கும்மாளங்கள் நிறைந்த குறும்படமாய், இளமைக்கால இனிய நினைவுகளை புரட்டிப்  பார்க்கும் ஓர் தொகுப்பாய் அமைந்திருக்கும்




சாவைக்கூட சந்தோசமாக ஏற்க துணியும் அந்த பொழுதுகளை உணர வைத்தது இந்த திருகோணமலை பயணம்

Exams, Classes, Relations  என்ற பல தீய சக்திகளுடன் போராடி திட்டமிட்ட படி யாழ் பேரூந்து நிலையத்தில் தொடங்கியது இவ் இனிய தூறலின் முதல்துளி. இதில் இறைவன் கொடுத்த வரமாய் மஹாப்பொல மற்றம் Supermoon காட்சி




    எண்ணிலடங்கா சின்ன சின்ன ஆசைகளின் எண்ணிக்கையை குறைத்த இநத பயணத்தில் 'பளை' தாண்டியதும் அரைக்கும் ஆலைகளாகி விட்ட வாய்க்கு 'ஹொரவப்பொத்தான' தாண்டியே ஓய்வு கிடைத்தது. A.R.Rahman பாடல்களுடன் பயணித்ததில் Headsets கொழுவிய நாம் செவிடர்களானோம்.

பயணத்தின் கடைசி மணித்தியாலத்தில் எரிச்சலூடடிய 3 Idiots இன் கோபத்தை வழியில வெசாக் பண்டிகையில் இனிப்பு பரிமாறிய அப்பாவியிடம காட்டியது தப்பாகவே தோன்றி இன்னமும் உறுத்துகிறது. பஸ்ஸின் முன் நின்ற எருமை மாடுகளை திட்டும் சாக்கில் அந்த 3 Idiots ஐ  வாரியதில் ஒரு துள்ளல்

மாலை நேரம் என்றாலே கடற்கரையில் அராய்ச்சி வானமும் கடலும் முட்டிக்குமா? இல்லையா? முட்டினா கொம்பு முளைக்குமா ? இல்லையா?  ( விடை இன்னும் தெரியவில்லை)



பௌர்ணமி நிலவு, கடற்கரைமணல், நண்பிகள், மெல்லிய மழைத்தூறல், ஐஸ்கறீம் - இது போதும் எனக்கு !

இரவு உணவு தந்த சங்கி அக்கா வீட்டில் மூக்கு முட்ட நிரப்பிவிட்டு திக்குமுக்காடிய வேளை வருங்கால அவர் கணவர்க்காக கண்ணீர்த்துளிகளுடன் இட்டலி தட்டு, தோசைக்கல்லு என இரு கதாபாத்திரங்கள்

கோணேஸ்வரர் ஆலயத்தில் சில்லறை எண்ணுகையில் - நாம World பூரா famous என்பது தெரிந்தது (நாம் வெள்ளைத்துணி விரித்து இருந்தது அவர்களிற்கும் தெரிஞ்சிடுச்சோ..? ? ?..)

நடுக்கடலில் நின்றபடி வட்டமேசை மாநாடு- எந்த topic பத்தி பேசுவது என்ற தலைப்பில் அரங்கேறிய வேளை கரையில் செருப்பு தொப்பி, phones க்கு காவலாய் அனந்நசயனத்தில் என் அண்ணண் பிரணவன் phone துடைப்போன் ஆகியதில் சுள்ளானாகிவிட்டான் அந்த வெள்ளையன்




கதறி கூச்சலிட்டும், கெஞ்சி மன்றாடியும் கேட்காது ஓருவரை ஒருவர் கடலிற்குள் அமிழ்த்தி எடுத்த வேளை தான் ஈவு இரக்கமே எமக்கு இல்லை என்ற திடுக்கிடும் தகவலை அறிந்து கொண்டோம்.





நடுக்கடலில் நின்று சோடா குடித்து மாங்காய் சாப்பிட்டதை விட உப்பில்லா வடையை கடல் நீரில் தொட்டு சாப்பிட்டு demo காட்டிய நண்பியை தொடர்ந்து follow பண்ணிய மற்ற நண்பி தான் highlights


கடலினுள் கோபுரம் கட்டுவதாய் தோளில் ஏறி, இருந்த கொஞ்ச முடியையும் பிய்த்தெறிந்த கொடூரமும், கடற்பாம்பை கண்டதும் கொண்ட பயமும், படகின் வெளியே தொங்கிய கால்களுடன் உல்லாசமாய் சுற்றி வந்த கடற்பயணமும் என்றுமே இனித்திடும்.


அடிவயிறு கூசும் மலைப்பாதை பயணமும், இராட்டினமும், செருப்புகளை காவு கொண்ட கோணேசர் மலை இறக்கமும்,அலைகளுடன் போராடி வென்று மணலில் எழுதிய பெயர்களும் நம் நினைவை விட்டு என்றுமே அழியாது.


நள்ளிரவு 1 மணி 2 மணி வரை செல்லும் 'கக்கபெக்க' சிரிப்பொலியுடன் 'கஜ்ஜகஜ்ஜ' என்ற ஓயாத அலப்பறைகள் பாகம் 1 முதல் பாகம் 4 வரை வந்துவிட்டாலும் பாகம் 3 தான் அதிகாலை 3 மணிவரை நீடித்தது அதுவும் நண்பியின் நுளம்புக்கடி தொல்லை பாம்புக்கடியோ என்ற பயத்துடன் ஆயுள்வேத முறைப்படி சித்தாலேப கொண்டு தீர்த்துவிட்ட MBBS நாங்கள்


அமைதியின் உறைவிடமாய் அமைந்த கிருஸ்ணன் கோயிலும், ஊதி ஊதி குளிக்க தோன்றிய கண்ணியா நீருற்றும், காட்டுவழி பயணித்த காயத்ரி கோயிலும், தியானத்திற்கு Demo காட்டிய கோயில் மண்டபமும் இந்த தூறலின் சில தூவல்கள்


பொம்மைகளுடன் பொம்மையாய் தோன்றிய தருக்ஷியும், Management madam ஆக தோன்றிய சாந்தி அன்ரியும், பொல்லாத பெரியம்மாவாகிவிட்ட என் பெரியம்மாவும், நம் கஞ்சத்தனத்தில் சிக்கித் தவித்த திருகோணமலை கடைகாரர்களும் புதுமுக வீரர்களாய் எம்முடன்.



கோணேசர்மலையில் இருந்து கடலை பார்த்ததும், அயல் வீட்டு மாங்காய் பறிக்க வந்த நம் முன்னோர்களை  (கு.ரங்கன்) தரிசித்ததும் , மலை அடிவாரத்தில் இறங்கியதும், Gun boat ஐ கண்டதும் S ஆகியதும் நடுக்கடலில் Bottle passing  விளையாடியதும், பசுமை நினைவுகளாகவே.....


மஹாபாரத கர்ணண் முதல் OKOK பார்த்தா வரை சொல்லிச் சென்ற நட்பில் நாமும் கைகோர்த்து நட்புக்கான இவ் வலைப்பூவில் ஒரு பூ வரைந்த மகிழ்கியுடன்,  அடுத்த சில நிமிடங்களில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சுற்றித்திரிந்த இனிய நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்த பெருமையுடன் விடை கொடுப்போம்

நிறைவேறாத ஆசைகள் குறைந்து விட்ட வேளை...

இனிய நினைவுகள் பல நிரம்பி நிற்கும் வேளை...

வாழ்நாள் முழுவதற்மும் இந் நினைவுகளில் வாழ்ந்திருப்போம்.....



Nishali Ni

Tuesday, February 21, 2012

உயிர் மூச்சின் இறுதி நிமிடங்களிலும் இனிக்கும் தருணங்கள்...



SWEETY GROUP  21 .02 .2008

நாம் நமக்கெனநாமம்சூட்டியநன்நாள்.2007 ஆம்ஆண்டின்காலாண்டு முடிவில்
மலர்ந்து,மணந்த நட்பூவிற்க்கு நல்லதொரு அடையாளமாய்,ஆரமாய் இந்த பெயர் வடிவில் இணை இல்லா நம் நட்பை நம் இதயங்களுக்குள் பொறித்த  நாள்.. 

என் நினைவு பேரேட்டின் பக்கங்களை கொஞ்சம் முன்னால் தட்டி பார்க்கிறேன்.. அதில் கொடுக்கல் வாங்கல்களாய் நம் நட்பின் பரிமாற்றங்களும் பரிமாணங்களும்....

க.பொ.த உயர்தர பருவத்திலே  வான் நிகர் வர்த்தகமே நம் அனைவரின் தெரிவாகியது நம் முதல் அதிர்ஷ்டம் .உயர்தர பரீட்சை  நம் குறிக்கோளாக இருந்த காலம் ஆதலால்அறிவுப் பொருளாதாரத்தின் தேவைக்கிணங்கஅறிவு விருத்திக்காக DMI  தனியார்கல்வி நிலையத்தைஅனைவருமே தெரிவு செய்தது இரண்டாவது அதிர்ஷ்டம்..
நம்மனங்களின்ஒருமித்த தன்மையின்  காரணத்தால்  உதிரிப்பூக்களாக இருந்தநாம் 
நட்பு எனும் வாசம் வீசும் உதிராத மலர்செண்டானோம் ...

உயிர் மூச்சின் இறுதி நிமிடங்களிலும் இனிக்கும் தருணங்கள்...

  1. தவறாமல் காலையில் துயில் எழுப்பும் தவறிய அழைப்புக்கள் (MISSED  CALLS)
  2. முன் வரிசை ,இரண்டம் வரிசை இருக்கைகள்..
  3. நாம் அறிமுகப்படுத்திய பத்திரிக்கை பழக்கம்..
  4. நண்பியின்அக்காவினுடைய திருமண வாரத்தில் ஒரு வாரம் திட்டமிட்டு (?) ,ஒழுங்கமைத்து (?) முதல் முறையாய் இணைந்து பயணித்த அச்சுவேலி பயணம் ..
  5. வீடு திரும்புகையில் பாதை தடை கடந்ததும் தடையிட  முடியாமல் எழும்பிய சிரிப்பலை .
  6. நள்ளிரவு வானொலி ஒலிபரப்புக்களுடன்   விடியல் தேடும் பூபாளமாய் விழித்திருந்த பொழுதுகள்...
  7. குறைவில்லா குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் ...
  8. நம் ஆதிக்கம் மட்டுமே நிறைந்த DMI கிணற்றடி 
  9. அடித்து பிடித்து உண்ணும் ஆகாரங்கள் ...
  10. சந்நிதிகோவில்திருவிழாவில்இளம்சிவப்பு,பச்சைவண்ண கைத்தொலைபேசி  வாங்கபோவதாய் கதை பேசிகேலி  செய்த  காலங்கள்...
  11. விடுமுறையில் சந்நிதியான் சந்நிதி தேடிஒன்றாய்பயணித்து , தொண்டமனாறு ஆழியிலும் நம்கால்  தடம்  பதித்த நினைவுகள்...
  12. பட்டங்களும், சங்கேத வார்த்தைகளும் சகஜமாகிப்போன  நாட்கள் ..
  13. இணைந்த அழைப்புக்கள்(CONFERENCE CALL) மூலம்நட்புக்களின் பிறந்த நாளில்  வாழ்த்துவதற்காய் நள்ளிரவு வரை தூக்கம்    மறந்திருந்த இரவுகள்...
  14. இன்ப அதிர்ச்சி அளிப்பதே இலட்சியமாக கொண்ட தந்திரோபாய பிறந்தநாள் பரிசளிப்புக்கள்...
  15. கண்டோஸ் கலந்த  கற்றல் மீட்டல்கள் (GROUP STUDY ) 
  16. அனைவரின் வீட்டிலும் அறுசுவை விருந்துகளும் அரட்டைகளும்

நீள்கின்ற நினைவுகள் அன்றும் தித்தித்தன,இன்றும் தித்திக்கின்றன..இனியும் தித்திக்கும் .......


                                                                                              Saru