ஏதோ ஓர் ஆர்வக்கோளாறிலும் நேரம் போவதற்காகவும் அலம்பல் ஒன்றை புலம்பியதை அடுத்து இன்னும் எழுதும் படி நண்பிகள் தூண்டியதன் பேரில் இன்னொரு முயற்ச்சி நண்பர்கள் தினமான இன்று இதைவிட வேறு எதை எழுதினாலும் சப்பையாக தான் இருக்கும் எனத்தோன்றியது.
காலம எழும்பினதில இருந்து SMS களும் Call களும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துக்களை அள்ளி வழங்கி சென்றது. Radio விலும் FB , Twitter லயும் Friendship day special தான்.
ஏதோ எழுதுவதை விட என் வாழ்கையில் முக்கியமான இடம் பிடித்த நட்பை பற்றி எழுதுவது என தீர்மானித்து விட்டேன்.
இதுநாள் வரையில் நட்பிற்கான அர்த்தங்களை அந்தந்த வயதிற்கு ஏற்றபடி 3 விதமாக அறிந்துள்ளேன்.முதலில் பெற்றோருடன் ஊரிலிருந்த அம்மம்மா தாத்தாவை பார்க்க சென்ற போது அறிமுகமான நண்பியிலிருந்து பள்ளியில் சேர்ந்த போது பக்கத்து கதிரைகளில் இருப்பவர்கள், அயல் வீடுகளில் என் வயதை ஒத்த குட்டி குட்டி நண்பர்கள் வரையிலும் எனக்கான நட்பு வட்டத்தை அமைத்து கொண்டேன்.
அக்காலத்தில் நேரம் போவதை மறந்து விளையாடுவது, பேனா பென்சில்களை பரிமாறுவது, முக்கியமாக சாப்பாடுகளை மாற்றி உண்பது, பாடசாலை வீடடுவேலைகளை (Homework) செய்து கொடுப்பது, பிறந்த நாளிற்கு Toffee, Chocolates கொடுப்பது, புதுச்சட்டை போட்டால் அதை அளவில்லா ஆனந்தத்துடன் கொண்டு போய் காட்டுவது, அம்மா அப்பாவை நச்சரித்து தீபாவளிcard வாங்கி அதில் ஏதோ எல்லாம் எழுதி நண்பிக்கு தெரியாமல் அவளின் கொப்பியில் ஒளித்து வைப்பதில் ஓர் பரம திருப்தி.
இதில் பள்ளிக்கூட காலத்தில் எனது நண்பியும் நானும் சேர்ந்து செய்த அடடூழியங்கள் பல, அவற்றில் தரம் 5 ற்கு அனுமதி மறுக்கப்பட்ட பாடசாலை சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து 'ஆனால் அது நிஜம்' (அந்த கால TV தொடர்) என நடத்திய நாடகம், பாடசாலை தோட்டத்தில் பயிற்றங்காய் புடுங்கி அதிபரிடம் வாங்கிய பேச்சுகள் இரண்டும் சுவாரஸ்யம்.
அடுத்து தரம் 6 ல் அடுத்து வேறு பள்ளிக்கூடம் சேர்ந்தால் எனக்கான நட்புவட்டம் இன்னும் கொஞ்சம் விரிந்தது. அப்போது பக்கத்து கதிரைகளில் இருப்பவர்களுடனும் எனக்கு பிடித்த சிலரிடமும் பழகி நட்பு எனும் உறவை வளர்த்துக்கொண்டேன்.
ஒப்படை எழுதிகொடுப்பது, homework செய்து கொடுப்பது, தனியார் வகுப்புகளிற்கு சேர்ந்து செல்வது, என தொடர்ந்து O/L காலங்களில் சேர்ந்து படிப்பது வரை தான் நட்பு என நினைத்ததுண்டு. இந்தக்காலத்தில் சேர்ந்து படித்த நண்பிகளை அடுத்த ஆண்டு வேறு வகுப்பிற்கு மாற்றி விட்டால் இருந்து கண்ணீர் வடிப்பது, பிறகு மனதை தேற்றி intervel ல் மட்டும் ஓரே இடத்தில் சேர்ந்து சாப்பிடுவதும் தனி இன்பம்.
பாடசாலை காலத்திலேயே A/L என்பதே Highlight என்றெ கூற வேண்டும். எங்கெங்கோ இருந்து பலர் வந்தாலும் அதில் எப்படியோ முதலில் சிரிப்புக்களை மட்டுமே பரிமாறி பின் கூட்டமாய் இருந்து (தனியார் வகுப்பிலும், பாடசாலையிலும்) பலபல விடயங்களைப்பேசினோம்.
உணர்வுகள் நடத்தைகள் பலவும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்துவிட்டகாரணத்தால் பின்னர் அது மேலும் வலிமையடைந்து sweety Group என பெயர் வைத்து, அதன்பெயரில் நாம் செய்த, செய்கின்ற அட்டகாசங்கள் அளப்பறைகள் பல.அவற்றை எனது நண்பி ஏற்கனவே ஒருPost ல் எழுதியபடியால் அதை தவிர்த்து விடுகிறேன்.
அதற்கான இணைப்பு http://sweetsweetygroup.blogspot.com/2012/02/sweety-21.html
இதனால் எங்கள் மேல் கடுப்பான பல மாணவர்கள், ஆசிரியர்கள் ஏன் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தவரும் உண்டு.ஆனாலும் ஒருவாறு அனைவரும் A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று அனைவரின் வாயையும் மூடிவிட்டோம்.
சந்தேகத்திற்கு இடமில்லாத நட்புகள் சந்தோசம் மட்டுமே நிறைந்த பள்ளிபருவத்தை கடந்த பின் தான் அதுவே என் உலகம் என்ற உணர்விலிருந்து வெளிவந்தேன். ஏகப்பட்ட சவால்களை சந்தர்ப்பங்களைத் தாங்கி புன்னகையுடன் வரவேற்றது வேறு ஓர் உலகம்.
நல்லா வந்து மாட்டிக்கிட்டியா ??? என்று சிரித்ததோ
எதிர்கால வெற்றிகளை எண்ணி சிரித்ததோ தெரியவில்லை.(இதற்கான விடையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.) இதன்போது என்பலமாக Sweety Group உடன் வந்துகொண்டிருக்கிறது.
Local, National, International என sweety Group ன் location மாறிவிட்டாலும் வருடத்தில் ஒரு முறையாவது சேர்ந்து எமது அளப்பறைகள் தொடராமலில்லை
அதில் அண்மையில் நடந்த நண்பியின் அக்காவின் திருமணம் அனைவரின் நினைவுகளிலும் ஓர் இனிய தடத்தை பதித்துள்ளது.
பரீட்சை காலங்களில் சேர்ந்து புத்தகம் கொப்பிகளை வைத்து கும்மியடிப்பதும் Serious ஆன பல பிரச்சினைகளை comedy யாகவும் மொக்கையான சில விசயங்களை Serious ஆகவும் அலசி ஆராயவும் நம்மால் மட்டுமே முடியும்.
பல பிரச்சினைகளின் போது நண்பர்களிடம் கூறி தீர்வு காண்பதும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் வீடுகளில் தங்குவதும், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை நண்பிகளுடன் சோந்து கதைக்கும் போது மறந்து விடுவதும் இப்படியான சுவாரஸ்யங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் பல பிரார்த்தனைகளுடன் அனுமதி கேட்டு சென்ற Trinco Tour ஐ வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது
இப்படி நட்புகளிற்கு ஓர் முக்கியமான இடம் எனது வாழ்க்கையில் எப்பவுமே உண்டு.
இதில் எனது முதல் நண்பியும், பள்ளியின் ஆரம்ப நாட்களில் கிடைத்த ஓர் நண்பியும் இப்பொழுதும் எம் sweety Group ல் இருப்பதற்கு கடவுளிற்கு நன்றி சொல்வதை தவிர வேறொன்றும் தெரியவில்லை எனக்கு.

அதை தவிர மற்றைய நட்புகள் எல்லாம் முகவரிகள் தொலைத்து, தொடர்புகள் விட்டுப் போய் விட்டாலும் தற்போது Facebook மூலம் சிலரின் தொடாபு கிடைத்தது மகிழ்ச்சியே...
இத்தனை நாளும் வாழ்வின் முக்கியமான பல கட்டங்களில் Sweety Group எனது நம்பிக்கையாக என்னுடனேயே இருந்துள்ளது, இனியும் இருக்கும் என்பது உறுதி.
இதை வாசித்து விட்டு ஏன்டா இவள எழுதச் சொன்னோம் என்று அவர்கள் தலையில் அடிப்பதை தவிர வேறு வழியில்லை.
இனி எழுத சொல்லமாட்டார்கள்
ஆனாலும் தலைப்பை பார்பவாகள் அனைவருக்குமே நண்பர்கள் தினமான இன்று அவர்களின் நட்பு பக்கங்களை ஒரு முறையேனும் புரட்டி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.........
Harini